கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | மோகன் நடித்துள்ள ஹரா ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது! | விஜய் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெயர் அறிவிப்பு! | ஹிட் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம் | சினிமாவில் அடிவாங்கினா கூட வருத்தப்படுவாங்க அம்மா: நடிகர் ஹரிகிருஷ்ணன் நெகிழ்ச்சி | எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார் | முரண்களை கடந்த முழுமையான அன்பு இது |
நடிகை சாய் பல்லவி கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் 'களி' என்ற படத்தில் நடித்தார். பின்னர் 2018ல் தியா படம் மூலமாக தமிழில் அறிமுகமாகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து 'மாரி 2', 'என்ஜிகே' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவை கடந்து ஹிந்தி படங்களிலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
தற்போது ஹிந்தியில் நடிகர் அமீர் கானின் மூத்த மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‛ஏக் தின்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையைத் தொடர்ந்து ஜப்பானில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு இடையே ஜப்பானில் பல இடங்களை சுற்றிப்பார்த்த சாய்பல்லவி அதனை தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வந்தார்.
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு 'பார்ட்டி' அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சாய் பல்லவி, படக்குழுவினருடன் குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.