புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
செய்தித் தலைப்பில் உள்ள நடிகை ஜெயலலிதா என்பதைப் பார்த்து படிப்பவர்கள் குழப்பமடைய வேண்டாம். இவர் தெலுங்கு நடிகை ஜெயலலிதா. கமல்ஹாசன் நடித்து தெலுங்கில் வந்த 'இந்துருடு சந்துருடு' படத்தில் அவர் ஜோடியாக நடித்தவர். அப்படம் தமிழில் 'இந்திரன் சந்திரன்' என்ற பெயரில் டப்பிங் ஆகியும் வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் ஜெயலலிதா. தமிழில் விஜயகாந்த் நடித்த 'பெரிய மருது', அஜித் நடித்த 'அவள் வருவாளா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார். “நான் சரத்பாபுவைக் காதலித்தேன். அவரது வாழ்க்கையின் கடைசி காலத்தில் நான் அவருடன் இருந்தேன். நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அவர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்பினேன். இருந்தாலும் திரையுலகத்தில் செல்வாக்கு மிக்க சிலர் எங்களது திருமணம் நடைபெறவிடாமல் தடுத்தனர். நாங்கள் ஒன்றாக பல பயணங்களுக்குச் சென்றோம். எனது வாழ்க்கையில் என்னுடன் எப்போதும் இருக்க ஒரு வழிகாட்டி, ஒரு துணை எனக்கு தெய்வ சக்தியால் வந்தது என்று நம்பினேன். அவர் நல்லவராக, விதிவிலக்கானவராக இருந்தார். நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்திருந்தோம். எங்களது ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது,” என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
மறைந்த நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர். உடல்நலக்குறைவால் கடந்த வருடம் மறைந்தார். தெலுங்கு நடிகை ரமாபிரபாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் எட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார். அவரைப் பிரிந்த பின்பு, வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்து கொண்டார் சரத்பாபு. சில வருடங்களுக்குப் பிறகு அவர்களும் பிரிந்தனர். தற்போது சரத்பாபுவுடன் தான் ஒன்றாக வசித்தது பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். சரத்பாபு மறைந்து இத்தனை மாதங்கள் ஆன பிறகே அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பகிர்ந்துள்ளார்.