ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
லால் சலாம் படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, மகளிர் தினத்தையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கோபத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், புதுவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து பெண்கள் அனைவரும் சிவபெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இனிமேல் எந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது. மனித ரூபத்தில் அலைந்து கொண்டிருக்கும் பிசாசுகள் கையில் பெண்கள் சிக்கி சிதைந்து போகக்கூடாது. இது போன்ற கேடுகெட்ட மனிதர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். புதுவை சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கேள்விப்பட்டதும் என்னுடைய இதயமே நடுங்கி விட்டது. பலியான சிறுமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.