ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழகத்தில் வேற்று மொழிப் படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் கன்னாபின்னாவென ஹிட்டடிக்கும். அப்படி ஒரு ஹிட்டைக் கொடுத்துள்ள படமாக 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் இருக்கிறது. கமல் நடித்து வெளிவந்த 'குணா' படத்தின் 'ரெபரென்ஸ்' தான் இந்தப் படத்தின் இப்படிப்பட்ட வெற்றிக்கு முக்கிய காரணம்.
கடந்த வாரம் தமிழகத்தில் 1200 தியேட்டர்களில் ஓடிய இந்தப் படம் இந்த வாரத்தில் கொஞ்சம் குறைந்து 800க்கும் கூடுதலான காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக நேரடி தமிழ்ப் படங்களின் பேச்சையும், பரபரப்பையும் இந்தப் படம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. இங்கு வந்த சில இயல்பான படங்கள் கூட மக்களிடம் பேசப்படாமல் போய்விட்டது.
கமல்ஹாசன் உள்ளிட்ட பல தமிழ்க் கலைஞர்களும் வியந்து பாராட்டிய படமாக உள்ள 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் தமிழ் ரசிகர்களிடத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். இது போன்ற படங்கள், கதைகளை தமிழ் சினிமாவில் ஏன் யோசிக்காமல் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.