நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டப்பிங் பணிகளை துவங்கிய தனுஷ் | சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் | கே.ஜி.எப் 2 வெற்றியால் அலட்சியம் - பிரசாந்த் நீல் | குபேரா படத்தின் கதைக்களம் வெளியானது | விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவு : நெகிழ்ச்சியில் மகிழ்திருமேனி | ஹீரோவின் தலையீட்டால் படத்திலிருந்தே வெளியேறிய ஸ்ருதிஹாசன் | சட்டப்படி நடவடிக்கை - அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு | சன்னி லியோனுக்கு மாதம் 1000 உதவி தொகையா? - மோசடி புள்ளி சிக்கினார் | ஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸிற்கு படம் இயக்கும் வெங்கட் பிரபு | கங்குவா இரண்டாம் பாகம் : நட்டி நட்ராஜ் வெளியிட்ட தகவல் |
தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டேல்'. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க, 'கார்த்திகேயா 2' புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்க, அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட அங்குள்ள ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
அங்கிருந்து எப்படி தப்பித்து மீண்டும் இந்தியாவுக்கு அவர் திரும்புகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஒரு பாகிஸ்தானிய சிறை செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.