மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர், நடிகர் ஜிஎம் குமார் தன் முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 1986ல் பிரபு, ராம்குமார், பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அறுவடை நாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜிஎம் குமார். பின்னர், “பிக் பாக்கெட், இரும்புப் பூக்கள், உருவம்” ஆகிய படங்களை இயக்கினார்.
பின்னர் சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்தார். 2006ல் வெளிவந்த 'வெயில்' படத்தின் மூலம் நடிகராகவும் பிரபலமாக ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜிஎம் குமார் நேற்று பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,“எனது எக்ஸ்-ஐப் பார்க்க 3500 கிமீ கார் ஓட்டிச் சென்றேன். மெட்ராஸ், பெங்களூரூ, கோவா, பாம்பே, மெட்ராஸ்” எனப் பதிவிட்டுள்ளார்.
“கடந்த 30 வருடங்களாக பாம்பேக்கு டிரைவிங் செய்தே போய் வருகிறேன். நான் அவளுடன் டிரைவிங் போவேன், ஆனால், இப்போது விதி மாறிவிட்டது. அவளைப் பார்க்கத் தனியாகச் சென்றேன்,” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தன் முதல் பட கதாநாயகியாக நடிகை பல்லவியைக் காதலித்து மணந்து கொண்டவர் ஜிஎம் குமார்.