நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஆண்ட்ரியாவுக்கு தற்போது சற்று இடைவெளி விழுந்திருக்கிறது. 2022ம் ஆண்டு வெளிவந்த 'அனல் மேல் பனித்துளி' படம்தான் கடைசியாக தமிழில் வெளியான படம். அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'சைந்தவ்' என்ற தெலுங்கு படம் வெளியானது. தற்போது அவர் நோ என்ட்ரி, பிசாசு 2 படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'கா' என்ற படம் வருகிற மார்ச் 29ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆண்ட்ரியா ஷோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். வைல்ட்லைப் போட்டோகிராபரான அவர் அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக்கொள்ள அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார். நாஞ்சில் இயக்கி உள்ளார். சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ், உள்ளிட்ட பலர் டித்துள்ளனர். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி.பாபு இசையமைத்துள்ளார்.