நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2024ம் ஆண்டில் இதுவரையில் டாப் ஸ்டார்களின் படங்களோ, பிரம்மாண்டமான படங்களோ வெளியாகவில்லை. தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகியோரது படங்கள்தான் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் மார்ச் 1ம் தேதியன்று 5 படங்கள் வெளியாகின. இந்த வெள்ளியன்று மார்ச் 8ம் தேதியும் 5 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“அரிமாபட்டி சக்திவேல், கார்டியன், ஜே.பேபி, நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே, சிங்கப்பெண்ணே” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'கார்டியன்' படத்தில் ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஒரு பேய்ப் படம். 'ஜே பேபி' படத்தில் ஊர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்கள்தான் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ள படங்கள்.
“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'' புதுமுகங்கள் நடித்துள்ள படம். 'அரிமாபட்டி சக்திவேல்' படத்தில் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'சிங்கப்பெண்ணே' படத்தில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த சிறிய படங்கள் இந்த வாரத்தில் எப்படி வரவேற்பு பெறப் போகிறது என்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும்.