நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜாம்நகர் : 'ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில், 'நாட்டு நாட்டு...' பாடலுக்கு, 'பாலிவுட்' நட்சத்திரங்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் மேடையில் ஒன்றாக நடனமாடியது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
'ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, 28, 'என்கோர் ஹெல்த்கேர்' நிறுவன அதிபர் விரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட், 29, திருமணம் ஜூலை 12ல் நடக்கிறது.
திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் 1 - 3 வரை நடந்தன. இதில், பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா, விளையாட்டு வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நாள் கொண்டாட்ட நிகழ்வில், பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஒன்றாக மேடையில் நடனமாடினர். ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற, ஆஸ்கர் விருது வென்ற பாடலான, 'நாட்டு நாட்டு...' பாடலை ஹிந்தியில் ஒலிக்கவிட்டு மூவரும் நடனமாடினர். அவர்களுக்கான நடன அசைவுகளை, அந்த படத்தில் நடித்த தெலுங்கு நடிகரான ராம்சரண் மேடையில் கற்றுத் தந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காகவே அவர் பிரத்யேகமாக ஜாம்நகர் வரவழைக்கப்பட்டார்.