நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நகுல் நடிப்பில் ‛வாஸ்கோடகாமா' என்ற படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. அடுத்து அவர் நடிக்கும் புதிய படம் 'தி டார்க் ஹெவன்'. ரேணு சவுந்தர் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால் உள்பட பலர் நடிக்கிறார்கள். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். பாலாஜி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது. கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.
அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார். அவர் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார். இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. புலனாய்வு செய்யும் இன்ஸ்பெக்டராக நகுல் நடிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது என்றார்.