நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பிரபலமானவர் தமன்னா. சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2005 மார்ச் மாதம் 4ம் தேதி வெளிவந்த 'சந்த் ச ரோஷன் செஹ்ரா' என்ற ஹிந்திப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
2006ம் ஆண்டு வெளியான 'கேடி' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நுழைந்தார். அதற்கடுத்து எஸ்ஜே சூர்யா நடித்த 'வியாபாரி' படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அந்த இரண்டு படங்களும் அவருக்கு பெரிய வரவேற்பைத் தரவில்லை. 2007ல் வெளிவந்த 'கல்லூரி' படம்தான் தமன்னாவுக்கு திருப்புமுனையான படமாக அமைந்தது.
அதன்பின்பு, 'படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, தில்லாலங்கடி, சிறுத்தை, வீரம், பாகுபலி, தோழா, தர்மதுரை, தேவி, பாகுபலி 2” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் 2019ல் வெளிவந்த 'ஆக்ஷன்' படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. கடந்த வருடம் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.
சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து, “எனது அற்புதமான ரசிகர்கள் அனைவருக்கும், உங்கள் அர்ப்பணிப்பும், உற்சாகமும் எனக்கு உந்து சக்தியாக உள்ளது. நீங்கள் அனைவரும் விரும்பும் திரைப்படங்களைத் தொடர்ந்து தருவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் அதிகமான அற்புதமான வருடங்கள், அன்பாகவும், மறக்க முடியாதவையாகவும் நிறையட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.