நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தொடர்ந்து தாங்கள் மட்டும் இன்றி தங்களது மகன்களின் புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று தனது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன் பாலோ செய்திருக்கிறார் நயன்தாரா.
அது மட்டுமின்றி, ‛இது எனக்கு கிடைத்தது என்று அவளது கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்' என்ற ஒரு பதிவையும் போட்டுள்ளார் நயன்தாரா. அவரது புகைப்படத்துடன் கூடிய இந்த வாசகமும் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ஒருவேளை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிந்து விட்டார்களோ, அதனால்தான் அவரை அன்பாலோ செய்துள்ளாரோ நயன்தாரா என்று நெட்டிசன்கள் தங்களது யூகங்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் விக்னேஷ்சிவனை மீண்டும் பாலோ செய்தார் நயன்தாரா. மேலும், அவரது பதிவு, தற்செயலானதா அல்லது தங்களது படத்திற்கான விளம்பர யுக்தியா எனத் தெரியவில்லை.