இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதை அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார். “மாஸ்கோ… த கோட்…” என அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவில் ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். சென்னை, புதுச்சேரி, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இதற்கு முன்பு நடைபெற்றது. ரஷ்ய படப்பிடிப்பிற்குப் பிறகு சில காட்சிகள் சென்னையில் படப்பிடிப்பு நடந்த பின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்கிறார்கள்.
பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பார்வதி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, வைபவ் என பெரிய நட்சத்திரக் கூட்டம் இப்படத்தில் நடிக்கிறது. விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.