இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கன்னட நடிகையான பிரியங்கா திம்மேஷ் 6 ஆண்டுகளுக்கு முன்பு 'உத்தரவு மகாராஜா' படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் நடித்து முடித்துள்ள 'சத்தமின்றி முத்தம் தா' படம் நாளை வெளிவருகிறது. இந்த படத்தை கார்த்திகேயன் தயாரித்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். ராஜ்தேவ் இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி உள்ளது.
படத்தில் நடித்திருப்பது குறித்து பிரியங்கா திம்மேஷ் கூறும்போது, "சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். இதற்காக நான் ஶ்ரீகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன், சொன்னதைச் செய்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தப்படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது" என்றார்.