ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
தெலுங்கு திரையுலகில் 'மெகா ஸ்டார்' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். சில காலம் அரசியலிலும் இருந்து விட்டு மீண்டும் சினிமாவுக்கே திரும்பி வந்தார். இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய கலைச் சேவைக்காகவும் அவர் செய்துள்ள சாதனைகளுக்காகவும் அவருக்கு நமது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவில் உள்ள சிரஞ்சீவியின் ரசிகர்கள் நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான சிரஞ்சீவி ரசிகர்கள் கலந்து கொண்டனர். சிரஞ்சீவியின் ரசிகரும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் ஷெரீப் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.