இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

சில வருடங்களுக்கு முன்பு துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தை பா. இரஞ்சித் தயாரிப்பதாக அறிவித்தனர். இதற்கிடையில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரி செல்வராஜ் இயக்கியதால் இப்படம் தாமதமானது. இத்திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என்பதால் இதற்காக துருவ் விக்ரம் பல மாதங்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மார்ச் 15ம் தேதி தூத்துக்குடியில் தொடங்குகின்றனர். இதன் படப்பிடிப்பு 70 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.