இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானார் எஸ்.ஜே. சூர்யா. இதைத்தொடர்ந்து 'குஷி' படத்தை தமிழில் விஜய்யை வைத்தும், தெலுங்கில் பவன் கல்யாணை வைத்தும் இயக்கி வெற்றி பெற்றார். இதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கி, நடித்தார்.
கடந்த சில வருடங்களாக மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் நடிகராக கலக்கி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. அவரது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஆக எஸ்.ஜே.சூர்யா களமிறங்க உள்ளார். 'கில்லர்' என்கிற த்ரில்லர் படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கவுள்ளார் . இதில் கார் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற உள்ளதால் இதற்காக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மான்ஸ்டர், பொம்மை ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.