இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இசை அமைப்பாளர்கள் இசை சுற்றுப் பயணம் செய்யும் டிரண்ட் இப்போது அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இதனை பல ஆண்டுகளாக செய்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா தொடங்கினார். இப்போது யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சந்தோஷ் நாராயணன் நடத்தி வருகிறார்கள். இவர்கள் வரிசையில் தற்போது விஜய் ஆண்டனியும் இணைந்துள்ளார்.
'ரோமியோ விஜய் ஆண்டனி லைவ்-ன் கான்செர்ட்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் நான்கு முக்கிய நகரங்களான திருச்சியில் மார்ச் 30ம் தேதியும் சேலத்தில் ஏப்ரல் 6ம் தேதியும், கோவையில் ஏப்ரல் 7ம் தேதியும், மதுரையில் ஏப்ரல் 13ம் தேதியும் இசை கச்சேரி நடத்துகிறார்.