தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிசியாகி விட்டார் அஞ்சலி. தெலுங்கில் கேங்ஸ் ஆப் கோதாவரி, கேம் சேன்ஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2014ல் அவரது நடிப்பில் வெளியான ஹாரர் படம், 'கீதாஞ்சலி'. இதன் 2வது பாகம் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்துள்ள கேரக்டரிலேயே அஞ்சலி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். அஞ்சலி தவிர சீனிவாஸ் ரெட்டி, சத்யா, பிரம்மாஜி, ராகுல் மாதவ், ரவிசங்கர், ஆலி உள்பட பலர் நடித்துள்ளனர். கோனா பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் கோனா வெங்கட் தயாரித்துள்ளார். சிவா துர்லபதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் அஞ்சலி பேசியதாவது: இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 'கீதாஞ்சலி'தான் என்னுடைய முதல் முக்கிய கதாபாத்திரம், மேலும் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்னுடைய 50வது படமாக அமைந்தது, இது என்னுடைய கேரியரில் குறிப்பிடத்தக்க மைல்கல். இந்தத் தொடர்ச்சி இந்த முறை இன்னும் அதிகமான சிரிப்பையும் பயமுறுத்துவதையும் உறுதியளிக்கிறது, இது ஒரு மகிழ்ச்சிகரமான தியேட்டர் அனுபவத்தை உருவாக்குகிறது.
50 படங்களின் மைல்கல்லை எட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் சிவாவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறேன். கதையை கச்சிதமாக எடுக்க நேரம் எடுத்தாலும், படப்பிடிப்பை விரைவாக முடித்தோம். 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' மார்ச் 22ம் தேதி வெளியாகிறது. எனது 50வது படத்தை மக்கள் வெற்றி படமாக்குவார்கள் என்று நம்புகிறேன். என்றார்.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை வித்தியாசமாக மயானத்தில் நடத்த முடிவு செய்திருந்தனர். பிறகு அஞ்சலியின் 50வது படம் என்பதாலும் அவர் கேட்டுக் கொண்டதாலும் நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றினர்.