ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
காரைக்குடி : வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொடுக்க, அதை தூக்கி எறிந்த நடிகர் சிவகுமாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகுமார், 82. ஹீரோ, குணச்சித்ரம் என 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் சிவகுமார் பங்கேற்று வருகிறார். அப்படி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
ஏற்கனவே ரசிகர் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றபோது போனை தட்டிவிட்டார். இது வைரலாகி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி தந்தார். அதே போல் இன்னொரு நிகழ்ச்சியில் மற்றொரு ரசிகர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார், அப்போதும் தட்டிவிட்டார்.
இந்நிலையில் காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார் சிவகுமார். அந்த இடத்திலேயே அந்த முதியவர் மனம் நொந்து போனார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து சிவகுமார் பொது நிகழ்வுகளில் இதுபோன்று நடந்து கொள்வது ரசிகர்கள் இடையே கோபத்தை வர வழைத்துள்ளது. அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.