ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் தனுஷ் ஏற்கனவே 'ப பாண்டி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அந்த படம் வரவேற்பை பெற்ற நிலையில் சில வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ள தனுஷ், ‛ராயன்' என்கிற படத்தை இயக்கி தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இது தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் செல்வராகவன், துஷாரா விஜயன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது ‛சூரரைப்போற்று' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளியும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர்.
ராயன் படத்தில் அவரது கதாபாத்திர போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, “சூப்பர் டேலண்ட் கொண்ட அபர்ணா பாலமுரளி” என குறிப்பிட்டு அவரை ராயன் படத்திற்கு வரவேற்றுள்ளார் தனுஷ்.
இந்த படத்தில் இணைந்தது குறித்து அபர்ணா பாலமுரளி வெளியிட்டுள்ள பதிவில், “ராயன் படத்தில் ஒரு அங்கமாக மாறுவதற்கு வாய்ப்பு கொடுத்த தனுஷுக்கு நன்றி. ஒரு ரசிகையாக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய எனது கனவு நனவான தருணம் இது. நீங்கள் எங்களுடைய இன்ஸ்பிரேஷன். இது நிஜமாகவே ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார்.