இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம் 'மங்கை'. குபேந்திரன் காமாட்சி இயக்கி உள்ளார். நாயகியை மையமாக கொண்ட இந்த படத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கிறார். ஆனந்தி தவிர துஷி, பிக்பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இசையமைத்திருக்கிறார்.
'மங்கை' குறித்து ஆனந்தி கூறியதாவது: 'கயல்' வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து 'மங்கை' படம் வெளியாக இருக்கிறது. 'மங்கை' எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கேரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். நல்ல படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள். இப்படத்திற்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.