இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

யோகி பாபு நடித்துள்ள பல படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளது. முதன் முறையாக ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் புகழ்பெற்ற சுரேஷ் சங்கையா இயக்குகிறார். யோகி பாபு ஜோடியாக நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ஹவுஸ் ஒனர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எஸ்.ஆர்.ரமேஷ் பாபுவின் ஆர்.பி.டாக்கீஸ் மற்றும் ஜெகன் பாஸ்கரனின் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
சுரேஷ் சங்கய்யா கூறும்போது "இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும். இது ஒரு வேடிக்கையான ரோலர் கோஸ்டராக சமூக செய்தியுடன் இருக்கும்" என்றார்.