இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

திருமகள் தொடரில் சுரேந்தரும், நிவேதிதாவும் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். நடிகை நிவேதிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனையடுத்து சுரேந்தருடன் சீரியலில் நடிக்கும் பொழுது ஏற்பட்ட நட்பு காதலாக மலர, அதுகுறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து நிவேதிதா முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததையும் தனது இரண்டாவது திருமண விருப்பம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டு மக்களிடம் கருத்துக் கேட்டிருந்தார். இதற்கு பலரும் பாசிட்டிவாக பதிவிட்டு சுரேந்தருடன் எப்போது திருமணம் என்று கேட்டிருந்தனர். இந்நிலையில், சுரேந்தர் - நிவேதிதா திருமணம் தற்போது உற்றார் உறவினர் புடைசூழ கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சுரேந்தர் - நிவேதிதா திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக சக நடிகர்களும், ரசிகர்களும் தங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.