500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
தென்னிந்தியாவின் பிரபலமான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஜிஜ்னா ராதாகிருஷ்ணன். 'மே ஹூன் மூசா' படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்தார். தற்போது நடித்து முடித்துள்ள 'போரட்டு நாடகம்' மே மாதம் வெளிவருகிறது. ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.
இந்த நிலையில் அவர் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். "தமிழ் மொழியில் நடிக்கும் ஆர்வம் எல்லோருக்கும் இருப்பதை போல எனக்கும் இருக்கிறது. இதற்காக கதை கேட்டு வருகிறேன். மக்களுக்கு பிடித்த, இயக்குனரின் நடிகையாக இருப்பதையே விரும்புகிறேன். விரைவில் தமிழ் ரசிகர்கள் என்னை திரையில் காணலாம்" என்கிறார் ஜிஜ்னா.