நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களைத் தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. 'இந்தியன் 2' மட்டுமல்ல அடுத்த சில மாதங்களில் 'இந்தியன் 3'யும் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக ஆரம்பமாகியுள்ளது என தகவல் வந்துள்ளது. தெலுங்கில் மிக முக்கிய வினியோக ஏரியாவான நிஜாம் ஏரியாவை பிரபல ஏசியன் சுரேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து கைப்பற்றியுள்ளதாம்.
தெலுங்குத் திரையுலகத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளவர் கமல்ஹாசன். அந்தக் காலத்திலேயே தெலுங்கில் அவர் நேரடியாக நடித்த சில படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கமல் படத்திற்கு அங்கு பெரிய எதிர்பார்ப்பும், வியாபாரமும் இருக்கும் என்கிறார்கள்.
வியாபாரப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகி நடந்து வருவதால் விரைவில் படம் குறித்த அப்டேட் வரும் எனத் தெரிகிறது.