மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
'ஏஐ' என அழைக்கப்படும் 'Artificial Intelligence' மூலம் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரல் மூலம் பாடல் ஒன்றை பயன்படுத்திய 'கீடா கோலா' பட இயக்குனர் மீது எஸ்பிபி சரண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன் அனுமதி பெறாமல் இப்படி தனது அப்பாவின் குரலைப் பயன்படுத்தியதற்காக எஸ்பிபி சரண் சார்பாக அவரது வழக்கறிஞர் கவிதா தீனதயாளன் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை படக்குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.
“சரண் மற்றும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் இப்படி எஸ்பிபி அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதை அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். அதேசமயம் அதை வியாபார ரீதியாகவோ, படங்களிலோ பயன்படுத்துவதுதான் சிக்கலை உருவாக்குகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அதை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தார். மறைந்த பாடகர்களின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று, சரியான அங்கீகாரமும் கொடுத்துள்ளார். ஆனால், ‛கீடா கோலா' குழுவினர் எந்தவிதமான முன் அனுமதியையும் பெறவில்லை, எந்தவித அங்கீகாரமும் கொடுக்கவில்லை.
நாங்கள் படக்குழுவிடம் மன்னிப்பையும், 1 கோடி ரூபாய் ராயல்டியும் தர வேண்டும் எனக் கேட்டுள்ளோம். சட்டத்திற்குப் புறம்பாக இப்படி மறைந்த பாடகர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதற்கு நாங்கள்தான் முதலில் வழக்கு தொடுக்கிறோம் என நினைக்கிறேன்.
இதற்கு முன்பு பல பேட்டிகளில் இப்படி ஏஐ மூலம் எஸ்பிபி அவர்களின் குரலைப் பயன்படுத்தியது குறித்து பேட்டி அளித்த படக்குழுவினர், தற்போது முழுவதையும் நிராகரித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
தருண் பாஸ்கர் இயக்கியுள்ள 'கீடா கோலா' படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் தெலுங்கில் வெளியான ஒரு படம்.