500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ரோஜா தொடரில் நடித்து பிரபலமான சிபு சூரியனுக்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனினும், ரோஜா தொடருக்கு பின் அவருக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் சிறப்பான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில், ஜீ தமிழ் சேனலில் வைஷ்ணவி அருள் மொழியுடன் அவர் ஜோடியாக நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வர ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால், வீரா என்கிற புதிய தொடரில் சிபு சூரியன் வைஷ்ணவி அருள்மொழிக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார். அதிலும் அந்த தொடருக்கான வெளியான புரொமோவில் சிபு சூரியன் இறந்துவிட்டது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சீரியலில் சிபு சூரியன் வெறும் கெஸ்ட் ரோல் தானா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.