500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி. அதன்பின் தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் மற்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். ஹிந்தியில் 'ஜவான்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகைகள் 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து ஏர்போர்ட், ஜிம் ஆகிய இடங்களில் போட்டோக்கள், வீடியோக்கள் எடுப்பது பற்றிய ரகசியத்தை உடைத்துள்ளார்.
சில நடிகைகள் அவர்கள் செல்லுமிடங்களைப் பற்றி ஏஜென்சிக்களிடம் சொல்லி விடுவார்கள். அந்த ஏஜென்சிக்கள், புகைப்படக் கலைஞர்களை அந்த நடிகைகள் செல்லுமிடங்களுக்கு போக வைத்து புகைப்படம், வீடியோக்களை எடுக்க வைப்பார்கள்.
பின்னர் அவற்றைப் பகிர்ந்து யதேச்சையாக சென்றது போல 'Spotted' என தலைப்பிட்டு, ஏர்போர்ட், ஜிம் இடங்களில் நடிகைகள்… என சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அது ஒரு டிரென்டாகவே தற்போது மாறிவிட்டது. அதற்காக அவர்கள் தரும் விலை அதிகம் என்றோ, குறைவு என்றோ சொல்ல மாட்டேன். என்னிடமும் அது போல செய்து தர வேண்டுமா என என்னிடமும் கேட்டார்கள், அப்படியான கவனம் எனக்குத் தேவையில்லை என சொல்லிவிட்டேன். இந்த கலாச்சாரம் தற்போது தென்னிந்தியத் திரையுலகத்திலும் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யு டியூப் ஷார்ட்ஸ் ஆகியவற்றைப் பார்த்தால் அவர் சொல்வது உண்மைதான் என ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம்.