அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து நடித்த இந்தப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. இயக்குனர் பஷில் ஜோசப் இந்த படத்தை இயக்கி இருந்தார். கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண மனிதர்களுக்கு திடீரென சூப்பர் மேன் பவர் கிடைக்கும்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலையும் அதன் விளைவுகளையும் மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இந்த படத்தை படமாக்கி இருந்தார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு பாலிவுட்டில் இருந்து கூட பலரும் பஷில் ஜோசப்பை பாராட்டினார்கள். இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சக்திமான் என்கிற படத்தை பஷில் ஜோசப் இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மின்னல் முரளியாக நடித்த டொவினோ தாமஸும் ஒரு பேட்டியில் சூசகமாக உறுதி செய்துள்ளார். ஆனாலும் இந்த படம் அடுத்த வருடம் தான் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.