அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
‛கேப்டன் மில்லர்' படத்திற்கு பின் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வந்தார். இது அவரின் 50வது படமாகும். இந்த படத்திற்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தனுஷ் மொட்டை போட்டு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது இந்த படத்திற்கு ‛ராயன்' என பெயரிட்டு படத்தின் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் தள்ளுவண்டி கடை மாதிரியான ஒரு வாகனத்தில் சந்தீப் மற்றும் காளிதாஸ் கையில் கத்தியுடன் இருக்க, தனுஷூம் கையில் ஆயுதம் ஒன்றுடன் ரத்தக்கறை படிந்திருக்க உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு கோடை விடுமுறையில் அதாவது மே மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.