3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நிமிஷா சஜயன். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றதால் இவரைத்தேடி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. திரைப்படங்கள் மட்டுமல்லாது பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 'போச்சர்' என்கிற வெப்சீரிஸிலும் கதாநாயகியாக தற்போது நடித்துள்ளார் நிமிஷா சஜயன். தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றி பேசும் விதமாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸில் இவர் வனத்துறை காவலராக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த வெப் சீரிஸில் தன்னை ஒரு நிர்வாக தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட்.. இந்தநிலையில் இந்த வெப்சீரிஸை பார்த்த ஆலியா பட் இதில் நிமிஷா சஜயனின் நடிப்பை கண்டு வியந்து போய், என்னுடைய ஆல் டைம் பேவரைட் நடிகை என்றால் அது நிமிஷா சஜயன் தான் என பாராட்டி உள்ளார். இந்த வெப்சீரிஸின் துடிக்கும் இதயம் என்றும் அவரை புகழ்ந்துள்ளார் ஆலியா பட்..