நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா 1'. அப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று 300 கோடிக்கும் அதிகமா வசூலித்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படம் இந்த வருடம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
74வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் அல்லு அர்ஜுன் இப்போதுதான் கலந்து கொள்கிறார். 'புஷ்பா 1' படம் ரசிகர்களுக்காக திரையிடப்படுகிறது. அங்கு அமெரிக்க இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “புஷ்பா 3', படத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். இதை 'புஷ்பா' லைன்-அப் படங்களாக உருவாக்கும் எண்ணமும் இருக்கிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள் இப்படத்தை எப்படி பார்க்கிறார்கள், இந்தியத் திரைப்படங்களை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள். திரைப்பட விழாக்கள் பற்றியும், என்ன மாதிரியான படங்களைப் பார்க்கிறார்கள், இங்கு வருபவர்களின் ரசனை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க இங்கு வந்துள்ளேன்.
'புஷ்பா 1' படம் தியேட்டர்களில் பார்த்தவர்களை விடவும், ஓடிடி தளத்தில் பல முறை பார்த்தவர்கள் மிக அதிகம். தியேட்டர்களில் ஓரிரு முறைதான் அப்படத்தைப் பார்த்தார்கள். ஆனால், ஓடிடி தளத்தில் பல முறை பார்த்துள்ளார்கள். இதனால், வேறு மொழிகளில், வேறு பிரதேசங்களில், வேறு நாடுகளில் பலரும் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. 2021ம் ஆண்டில் இந்தப் படம் இந்தியாவில் பெரிய வரவேற்பைப் பெற்றதும் இதற்கு ஒரு காரணம்.
இந்திய நகர்ப்புற ரசிகர்களும், வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் சினிமாவை ரசிக்கும் விதத்தில் பெரிய வித்தியாசமில்லை என நினைக்கிறேன்.
'புஷ்பா 1' படத்தை விடவும் 'புஷ்பா 2' படம் சர்வதேச அளவில் சென்று சேரும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. எனது புஷ்பா கதாபாத்திரத்திற்கும், பஹத் பாசில் நடிக்கும் பன்வர் சிங் கதாபாத்திரத்திற்கும் இடையிலான பிரச்சனைதான் இரண்டாம் பாகம்,” என்று தெரிவித்துள்ளார்.