நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்தன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். பாலிவுட்டில் அறிமுகமான இவரின் குட்பை படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான அனிமல் படம் அவரை உயரத்தில் தூக்கி வைத்துள்ளது. ரூ.2 கோடி சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா இப்போது தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர்ப்ஸ் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். சர்வதேச மீடியா நிறுவனமான போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும் இசைத்துறையில் அதிதி சைகல் என்ற பா டகி இடம் பெற்றுள்ளார்.
ராஷ்மிகா தற்போது தனுஷின் 51வது படம், புஷ்பா 2ம் பாகம், ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். அனிமல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.