இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ் இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனியும், தெலுங்கு நடிகர் தன்ராஜும் இணைந்து உருவாக்கும் படம் 'ராமம் ராகவம்'. பிருத்வி போலவரபு தயாரிக்கிறார், தன்ராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார். தந்தையாக சமுத்திரக்கனியும் மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஹரிஷ் உத்தமன், சுனில், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், ராக்கெட் ராகவா, ரச்சா ரவி, இந்தூரி வாசு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படத்தின் முதல் காட்சியை சமூக வலைதளங்கள் வழியாக தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்தினார். "தன்ராஜ் ஒரு நல்ல கதையை திரைப்படமாக்கியுள்ளார் . அவர் பிஸியான நடிகராக இருந்தும் இயக்குனராக தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் இந்தப் படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தினார்.
படத்தின் படப்பிடிப்பு ஐதராபா த், அமலாபுரம், ராஜமுந்திரி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.