வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நியூ நார்மல் பிலிம் பேக்டரி சார்பில் இளஞ்செழியன், ஜியோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் எம்.கோடீஸ்வரர் ராஜு இணைந்து தயாரிக்கும் படம் 'தங்க முட்டை'. தெலுங்கில் பங்காரு குட்டு என்றும் இரு மொழிகளில் தயாராகி இருக்கிறது.
இந்தப் படத்தை கோபிநாத் நாராயணமூர்த்தி எழுதி, இயக்கி உள்ளார். இயக்குனர் மிலிந்த்ராவ் மற்றும் இயக்குனர் ஆர்.கண்ணண், பிஜோய் நம்பியாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் சம்பூர்ணேஷ் பாபுவுடன் ரோபோ சங்கர், சுரபி சுக்லா, மொட்ட ராஜேந்திரன், சரண்ராஜ், துவாசி மோகன், சுரேகா வாணி, லொள்ளு சபா மனோகர், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேஷு, ராம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதாநாயகி கிரண் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீர் டாண்டன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, "இந்த படத்தில் சம்பூர்ணேஷ் பாபு காமெடி திருடனாக நடித்துள்ளார். அவருக்கு ஒரு தங்க முட்டை கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது தான் படத்தின் கதை. அந்த தங்க முட்டை என்ன என்பது சஸ்பென்ஸ். சீரியஸான காட்சிகளும் நல்ல மெசேஜும் படத்தில் உள்ளது. தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் தனித்தனியாக உருவாகியுள்ள இந்த படம் ஒரே நேரத்தில் வெளியாகிறது.