ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மார்க்கெட்டில் பிசியாக இருந்த நடிகைகள், ஒரு இரண்டு மாதம் படவாய்ப்பு இல்லையென்றால், மூட்டை முடிச்சுகளோடு சொந்த ஊருக்கு ரயிலேறி விடுவார்கள். ஆனால், நமீதாவுக்கு இளைஞன் படத்தில் வில்லியாக நடித்தபிறகு படங்களே இல்லை. ஆனபோதும், என்னமோ கைநிறைய படங்கள் இருப்பதுபோல் இன்னமும் கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வருகிறார். ஆடியோ விழாக்களுக்கு அந்த படங்களில் நடித்த கதாநாயகிகளே வராதபோதும், நமீதா ஆஜராகி விடுகிறார்.
ஆனால் அப்படி வரும்போது, மேடையில் மற்றவர்களை கவர என்னென்ன பேச வேண்டும் என்று ரிகர்சல் பார்த்து விட்டு வந்து, மைக்கைப்பிடித்து கடித்து துப்புகிறார். இருப்பினும், பேசுவது நமீதாவாயிற்றே, அதனால் அவர் என்ன பேசினாலும் அதற்கு கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது ரசிகர் பட்டாளம். இப்படியாக சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கு விசிட் அடிக்கும் நமீதா, முன்பு மாதிரியெல்லாம் துக்கடா துணிகளை அணிந்து வராமல், புடவை கட்டி பக்கா தமிழச்சி போலவே வருகிறார்.
அதைப்பார்த்து, இதென்ன திடீரென்று புடவைக்கு மாறிட்டீங்க? என்று யாராவது கேட்டால், புடவைக்கு நான் இப்ப மாறலீங்க. எப்ப சென்னைக்கு வந்தேனோ அப்பவே மாறிட்டேன். சினிமாவுல நடிக்காத நேரங்கள்ல புடவையிலதான் அதிகமாக இருப்பேன். அந்த வகையில இப்ப எனக்கு பிடித்த காஸ்டியூமே புடவைதான் என்று ஒரு பெரிய விளக்கமே கொடுக்கிறார் நமீதா.