இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக அவருடைய மேலாளர் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால் நேற்று நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே அப்படி செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டவர், நான் வெளியிட்ட அந்த செய்தி யார் மனதையாவது பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் .
அவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிப்பது ஒரு கீழ்த்தரமான செயல் என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அதோடு கடந்த 2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப்படி, சோசியல் மீடியாவில் பொய்யான தகவலை பரப்பினால் மூன்றாண்டு சிறை தண்டனையும், மீண்டும் அதே தவறை செய்தால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதோடு அவர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்படி ஒரு பொய் செய்தியை பரப்பிய நடிகை பூனம் பாண்டேவுக்கு மூன்று சிறை தண்டனை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.