நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் விஜய், அரசியலில் கால்பதித்துள்ளார். ‛தமிழக வெற்றி கழகம்' என தனது கட்சிக்கு பெயரிட்டு, அதனை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். அவரது அரசியல் பிரவேசத்தை நடிகர்கள், பிற கட்சி தலைவர்கள் என பலரும் வரவேற்றனர். இந்த நிலையில் அரசியல் கட்சி துவங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகரும், தமிழக வெற்றி கழகம் தலைவருமான விஜய் நன்றி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், ‛தமிழக மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், ‛என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்' அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.