இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
'குட்நைட்' படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படமான 'லவ்வர்' படத்திலும் மணிகண்டன் தான் கதாநாயகன். அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ கவுரிப்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. டிரைலரில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில், கோபத்தில் மணிகண்டன் சில கெட்ட வார்த்தைகளைப் பேசியுள்ளார். விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையையும் சேர்த்து இன்னுமொரு கெட்ட வார்த்தையை மணிகண்டன் பேசியுள்ளார். விஜய் முன்னணி நடிகர் என்பதால் அந்த கெட்ட வார்த்தை சர்ச்சையானது. மணிகண்டன் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் இன்னும் சர்ச்சையாகவில்லை.
இந்நிலையில் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதில் நீக்கப்பட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த விதத்தில் படத்தில் இடம் பெற்ற 18 கெட்ட வார்த்தைகள் 'மியூட்' செய்யப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் மட்டும் தலைமுடியைக் குறிக்கும் மற்றொரு வார்த்தையை படத் தயாரிப்பாளர் வேண்டுமென கேட்டிருக்கிறார்.
'லியோ' படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பின்னர் டிரைலரிலும் நீக்கப்பட்டது. அது போல இந்த 'லவ்வர்' படத்திலும் மணிகண்டன் பேசியுள்ள கெட்ட வார்த்தைகள் நீக்கப்படுமா?