கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது வாரிசுகளை குறிப்பாக பெண் குழந்தைகளை பெரும்பாலும் புகழ் வெளிச்சம் படாமல் வெளி உலகத்திற்கு காட்டாமல் வளர்த்து வருகிறார்கள். அதேசமயம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் வாரிசுகள் அவ்வப்போது சோசியல் மீடியா மூலமாக மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலமாக தங்களை பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை. குறிப்பாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா அடிக்கடி சோசியல் மீடியாவில் தன் தந்தையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
இந்த நிலையில் தனது தந்தை மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தை தனது தோழிகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்துள்ளார் சித்தாரா. அப்போது குண்டூர் காரம் படத்தில் தன் தந்தை அணிந்து நடித்த சட்டையை அணிந்து சென்றார் சித்தாரா. படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் குறிப்பாக குழந்தைகள் ஆவலாக அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவின் வைரலாகி வருகிறது.