பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

மலையாளத்தில் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஒரு பேண்டஸி படமாக மலைக்கோட்டை வாலிபன் படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யத் தவறினாலும் வித்தியாசமான முயற்சியை விரும்பும் ரசிகர்கள் இந்த படத்தை பாராட்டவே செய்கிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளது. அதில் கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் தனிஷ் சேட் என்பவர் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வரவேற்பு பெற்றுள்ளார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களை எளிதாக கவர்ந்ததற்கு காரணம் படம் முழுவதும் இவர் பாதி மொட்டை அடிக்கப்பட்ட தலைமுடி மற்றும் பாதி மழிக்கப்பட்ட மீசை தாடியுடன் தான் காட்சியளித்தார்.
கதைப்படி படத்தில் இவர் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கொடுக்கப்பட்ட தண்டனையாக இந்த கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை இதே போன்ற தோற்றத்தை ரொம்பவே கஷ்டப்பட்டு கட்டிக் காத்துள்ளார் தனிஷ் சேட். பொதுவாக பல நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்காக நீண்ட தலை முடியை வளர்த்து, அடர்த்தியான தாடியை வளர்ப்பார்கள். அவ்வளவு ஏன் மொட்டை கூட அடிப்பார்கள். ஆனால் இப்படி ஒரு கெட்டப்பில் இரண்டு மாதம் இவர் கஷ்டப்பட்டு தன்னை மறைத்துக் கொண்டு உலா வந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமான விஷயம் தான்.