நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‛விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளார்கள். இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் பங்கேற்றனர்.
இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளார்கள். இதுகுறித்த வீடியோவை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.தாணு. தமிழ் சினிமா தற்போது உலக அரங்கை நோக்கி சென்று கொண்டிருப்பது இந்த கைதட்டல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சூரி வெளியிட்ட பதிவில் ‛‛நெதர்லாந்த், ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது...'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.