நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமான பாலா தற்போது மக்கள் முன்னால் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ், குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை என வரிசையாக செய்து வந்த பாலா அண்மையில் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக சொந்த செலவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் பாலா செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாகவும், குறிப்பாக அவர் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் சக்திகள் இருப்பதாகவும் திராவிட அரசியல் பேசுவோர் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதுகுறித்து பதிலளித்துள்ள பாலா, 'நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாக விமர்சனம் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆமாம் இருக்கிறார்கள். என்னவென்றால் அவமானம், கஷ்டம் ஆகியவை தான். இவையெல்லாம் எனக்கு பின்னால் இருப்பதால் தான் நான் இந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.