500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
தமிழில் அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அறிமுகமான ஜோதிகாவுக்கு அந்த படம் திருப்பு முனையாக அமைந்தது. அதையடுத்து விஜய்யுடன் நடித்த குஷி படமும் ஹிட் அடித்ததால் முன்னணி நடிகையானார். அதோடு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் பல ஆண்டுகளுக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர், மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி என பல படங்களில் கதையின் நாயகியாக நடித்தார். சமீபத்தில் மம்முட்டியுடன் காதல் தி கோர் என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மாதவன், ஜோதிகா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் சைத்தான் படத்தை அடுத்து ஹிந்தியில் ராஜ்குமார் ராவ் என்பவர் நடிப்பில் உருவாகி வரும் ஸ்ட்ரீட்-2 என்ற படத்திலும் தற்போது நடித்து வரும் ஜோதிகா, இந்த படத்தை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார்.