500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். அதன்பின் தமிழில் 'பாகுபலி 1, புலி, முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சுதீப் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்த அற்புதமான என்டர்டெயின்மென்ட் துறையில் 28 அழகான ஆண்டுகள் என்பது எனது வாழ்க்கையில் மிக அழகானதொரு பகுதி. இந்த ஈடு இணையற்ற பரிசுக்குக் கடவுளுக்கு நன்றி. இந்த பயணத்திற்காக எனது பெற்றோர், குடும்பம், மதிப்புமிக்க டெக்னீஷியன்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், எனது சக நடிகர்கள், மீடியா, என்டர்டெயின்மென்ட் சேனல்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், வகுதா-வின் மொத்த குடும்பம், மற்றும் ஒவ்வொருவருக்கும் எனது பெரிய நன்றி.
எனது வாழ்க்கையில் நான் சம்பாதித்த, என் மீது அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும் ரசிகர்களாகிய எனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு பெரிய அணைப்பும், அதிகமான அன்பும். இது ஒரு ஏற்ற இறக்கமான வாழ்க்கை, இருப்பினும் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறேன்.
நான் குறையற்றவன் அல்ல, நான் சரியானவன் அல்ல, என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வாய்ப்புகள் வரும் போது என்னால் முடிந்ததைச் செய்கிறேன். என்னை அப்படியே ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சில வருடங்களுக்கு முன்பு நடந்தது போலத் தெரிகிறது. 'பிரம்மா' படத்திற்காக கண்டீரவா ஸ்டுடியோவில் அம்பரிஷ் மாமாவுடன் நுழைந்து, கேமராவுக்கு முன் நின்றது, சில வருடங்களுக்கு முன்பு நடந்தது போலத் தெரிகிறது. ஆனால், 28 வருடங்களாகிவிட்டது. பணிவாய் உணர்கிறேன். இந்த விலைமதிப்பற்ற பரிசுக்காக நான் ஒவ்வொருவருக்கும் அன்பும், மரியாதையும், நன்றியையும் வைத்துள்ளேன்,” என பதிவிட்டுள்ளார்.