500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
தமிழ், தெலுங்கு, அடுத்து ஹிந்தி வரை சென்றுள்ள சமந்தா தற்போது ஹிந்தியில் 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்துள்ளார். 'த பேமிலிமேன் 2' வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே ஆகியோர்தான் இத்தொடரையும் இயக்கியுள்ளார்கள். இத்தொடர் குறித்த அப்டேட் ஒன்றை சில புகைப்படங்களுடன் சமந்தா, வருண் தவான் இருவரும் இணைந்து கொடுத்திருக்கிறார்கள்.
“கடைசியாக, சிலவற்றை நாங்கள் பார்த்தோம், அது எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்பதுதான் 'சிட்டாடல்' பற்றி அவர்கள் கொடுத்த அப்டேட். லேப்டாப்பில் இயக்குனர்கள் ராஜ், டிகே ஆகியோருடன் சமந்தா, வருண் ஆகியோர் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள்.
'சிட்டாடல்' வெப் சீரிஸ் பிரியங்கா சோப்ரா, 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் ரிச்சர்ட் மேடன் நடிக்க ஹாலிவுட்டில் வெளியான ஒரு வெப் சீரிஸ். அதன் இந்திய வெர்ஷன்தான் 'சிட்டாடல்'. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சீரிஸின் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஹாலிவிட்டில் பெரிய வரவேற்பைப் பெறாத இந்த சீரிஸ் இந்தியாவில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப் போகிறது என்பது வெளியானபின் தெரியும்.