மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் பிரிவில் ஆஸ்கர் விருது வாங்கியவர் கேரளாவை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. அதை தொடர்ந்து தென்னிந்தியா மட்டும் அல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் என்கிற படத்திலும் இவர் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை குறித்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ரசூல் பூக்குட்டி, ஏ.ஆர் ரஹ்மானை மேஸ்ட்ரோ என்றும் குறிப்பிட்டுள்ளார். இசை மேதைகளை மேஸ்ட்ரோ என்று குறிப்பிடுவது சரிதான் என்றாலும் ரசிகர்களை பொருத்தவரை, ஏன் இந்திய அளவில் மேஸ்ட்ரோ என்றால் அது இளையராஜா ஒருவரை மட்டுமே குறிக்கும். இந்த விஷயம் தெரிந்தும் ரசூல் கூட்டி இவ்வாறு குறிப்பிட்டது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இசை ரசிகர்கள் பலரும் கலவையாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.