நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டில் கடந்தாண்டு இறுதியில் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் பாபி தியோல். எப்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய மொழிகளில் அடியெடுத்து வைத்து கேஜிஎப், லியோ என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ அதே பாணியில் பாபி தியோலும் தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.
அந்த வகையில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாபி தியோல். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 109வது படத்திலும் வில்லனாக நடிக்கிறார் பாபி தியோல். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த தகவலை அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை கே.எஸ் பாபி என்பவர் இயக்குகிறார். கடந்த வருடம் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படத்தை இயக்கியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.