நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. இதை இவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டு, அதில் நடக்கும் மதம் சார்ந்த அரசியல் ஆகியவற்றை இந்த படம் பேச உள்ளது. சில தினங்களுக்கு முன் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
அந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ‛‛அப்பாவை சங்கி என்று அழைப்பது கஷ்டமாக உள்ளது. அவர் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் அவர் நடித்திருக்க மாட்டார்'' என்றார். இது சமூகவலைதளத்தில் வைரலாகி பேசு பொருளானது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல. அந்த அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதத்தையும் விரும்புகிறவர் என்பது அவரது கருத்து. லால் சலாம் படத்தை விளம்பரம் செய்ய சங்கி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ‛லால் சலாம்' படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசி உள்ளார். படம் நன்றாக வந்துள்ளது'' என்றார்.